வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
போடி, ஆக. 29: போடி அருகே மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பெத்தணன் மனைவி ஈஸ்வரி (50). இவர் கடந்த 8ம் தேதி அதிகாலை 2 மணியளவில், வீட்டை பூட்டி விட்டு கொடைக்கானலில் உள்ள தனது அண்ணன் முருகன் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு திரும்பியபோ, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
Advertisement
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. ஈஸ்வரி புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement