வாக்குத் திருட்டை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
தேனி, செப். 27: வாக்குத்திருட்டை கண்டிக்கும் வகையில் தேனி நகர காங்கிரஸ் கட்சியினர் தேனி நகர் முஸ்லீம் புது பள்ளிவாசலில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்திய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குத்திருட்டு நடப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை கண்டித்து பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.
Advertisement
இதன்படி தேனி தேனி நகர காங்கிரஸ் சார்பில் நேற்று மதியம் வெள்ளிக்கிழமை தேனி நகர் முஸ்லிம் புது பள்ளிவாசலில் தேனி நகர் காங்கிரஸ் தலைவர் கோபிநாத் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சம்சுதீன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement