தேனியை குளிர்வித்த மழை பொதுமக்கள் ‘குஷி’
தேனி, செப். 26: தேனியில் நேற்று மதியம் திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கோடை வெய்யில் காலத்தை மிஞ்சும் வகையில் வெய்யிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், பகல் நேரங்களில் வீதிகளில் முதியோர், சிறுவர்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து தேனியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கியது.
Advertisement
இந்நிலையில் மதியம் 3 மணிக்கு மேல் தேனி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகம் இருள்சூழ்ந்து திடீரென கனமழை பெய்யத்துவங்கியது. இம்மழையானது கனமழையாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இம்மழை நேற்று மாலையிலும் தொடர்ந்து பெய்ததால், தேனி நகரானது குளிர்ச்சி அடைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Advertisement