கார்த்திகை சோமவார வழிபாடு
தேவதானப்பட்டி, நவ.25: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோவிலில் நேற்று கார்த்திகை திங்கள்கிழமையை முன்னிட்டு கார்த்திகை சோமவார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர், முருகன், அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், நடராஜர், சிவகாமிஅம்மாள், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. சிவனடியார்களால் திருமுறைகள் பாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement