கார் மோதி கண்டக்டர் பரிதாப சாவு
சின்னமனூர், நவ.25: சின்னமனூர் அருகே குச்சனூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டக்டராக பணி செய்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பணியை முடித்துக் கொண்டு ஊருக்கு போவதற்காக சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை பெட்ரோல் பல்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சின்னமனூரிலிருந்து சென்ற கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்து மயங்கினார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து இவரது மனைவி துர்கா சின்னமனுர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எஸ்.ஐ இளங்கோவன் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த சின்னமனூர் குட்டியப்பதேவர் சந்தையை சேர்ந்த முகேஷ் என்பவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தார்.