கடமலைக்குண்டு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
வருசநாடு, செப்.25: தேனி ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் மின்னல். இவரது மனைவி பவளக்கொடி (50). இவர் தேனியில் தனியார் கடையில் வேலை செய்து வந்தார். கடையில் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு அவசரத் தேவைக்காக கணவருக்கு தெரியாமல், வீட்டிலிருந்த ரூ.25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 22ம் தேதி அவர், கணவர் கேட்டால் என்ன சொல்வது என பயந்து மயிலாடும்பாறை அருகே வாய்க்கால்பாறையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
அன்றிரவு, வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.