மயங்கி விழுந்த முதியவர் சாவு
போடி, அக். 24: போடி குப்பிநாயக்கன்பட்டி கண்ணப்பர் தெருவை சேர்ந்த சேகர் (61). இவரது மகன் முருகன் (30). கோயமுத்தூர் வடவள்ளியில் தங்கி வேலை செய்து வருகிறார். சேகருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. கடந்த தீபாவளி 20ம் தேதி போடி எம்ஜிஆர் சிலை எதிர்புறம் கடையில் போதையில் மயங்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
Advertisement
அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து சேகரின் மகன் முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement