பட்டாசு வெடித்ததில் தகராறு
வடமதுரை, அக். 24: வடமதுரை அருகே தென்னம்பட்டி சுப்பாகவுண்டன் புதூரை சேர்ந்தவர் ராஜ் (65), விவசாயி. இவரது வீட்டின் அருகே கடந்த அக்.20ம் தேதி தீபாவளியன்று அஜித்குமார் (25) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது ராஜ் வீட்டில் கட்டி இருந்த 2 பசுமாடுகள் வெடி சத்தத்தில் மிரண்டு கயிற்றை அறுத்து கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.
Advertisement
இதையடுத்து ராஜ் மற்றும் அவரது மனைவி சந்திரா அவர்களிடம் சென்று ஓரமாக தள்ளி போய் பட்டாசு வெடிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவர்களிடம் தகராறு செய்ய, அஜித்குமார் கல்லால் ராஜை தாக்கியுள்ளார். இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின் பேரில் வடமதுரை எஸ்ஐ வேலுமணி இருவர் மீதும் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்தார்.
Advertisement