சாலை விபத்தில் பெண் பலி
தேனி, நவ.22: கூடலூர் தெற்குதெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி மனைவி பாக்கியம்(60). இவர் நேற்று முன்தினம், கூடலூரில் இருந்து உறவினர் சரவணன்(35) என்பவருடன் டூவீலரில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்றார். அப்போது வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் டூவீலர் ஏறி, இறங்கியது.
Advertisement
இதில் பின்னால் அமர்ந்திருந்த பாக்கியம், நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ரவி அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement