டூவீலர்கள் மோதி 3 பேர் படுகாயம்
நத்தம், நவ. 21: நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). விவசாயி. இவர் தனது டூ - வீலரில் செந்துறை நோக்கி சென்றார். அப்போது மங்களப்பட்டி பிரிவு ஒற்றன்குட்டு பகுதியில் சென்ற போது பின்னால் சின்னமலையூரைச் சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் பழனிச்சாமி, சரவணன் மற்றும் சரவணன் ஓட்டி வந்த டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த கணபதி ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் அடைந்தனர்.
Advertisement
அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சரவணன் மற்றும் கணபதி ஆகியோரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement