கால்நடை மருத்துவ உதவியாளர் தற்கொலை
வருசநாடு, ஆக.21: கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் இளையசாமி (43). இவர், ஊரில் கால்நடை மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு உமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
Advertisement
குடிப்பழக்கத்துக்கு ஆளான இளையசாமி, வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், கடமலைக்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement