பெரியகுளம் அருகே கார் மோதி தொழிலாளி படுகாயம்
தேனி, ஆக.20: பெரியகுளம் அருகே திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத கார் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கிட்டுசாமி (46). செண்டிரிங் தொழிலாளி. பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் அவன்யூவில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.
Advertisement
நேற்று முன்தினம் மதியம் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, தேனியில் இருந்து அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் படுகாயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement