மதுபாட்டில் பறிமுதல் இரண்டு பேர் கைது
போடி, நவ.19: போடி பகுதியில் புகையிலை மற்றும் மது பாட்டில்கள் விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். போடி சர்ச் தெருவை சேர்ந்த ஆண்டவர் மகன் விஜய் (33). இவர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை அனுமதி இன்றி வாங்கி விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்தார். அதன்படி பழைய பஸ் நிலையம் அருகே ஒரு திருமண மண்டபம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
Advertisement
ரோந்து சென்ற போடி நகர் போலீசார், அவரிடம் இருந்த 30 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தார். இதுபோல் போடி முதல்வர் காலனியை சேர்ந்த மீனாட்சி (65) சட்ட விரோதமாக அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
Advertisement