கிணற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி உடல் மீட்பு
போடி, நவ.19: போடி மயானம் ரோடு இ.பி ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் வீரணன்(56). கூலி வேலை செய்து வந்த நிலையில், இவரது மனைவி கண்மணி 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதற்கிடையில் வீரணனுக்கு உடல்நிலை பாதிப்பிற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தொடர முடியாமல் இருந்தார்.
Advertisement
கடந்த 16ம் தேதி வீரணன் போடி-தேனி சாலையில் உள்ள போஜன் பார்க் பகுதியில் திரிந்துள்ளார். பின்னர் பத்ரகாளியம்மன் கோயில் ரோட்டில் நடந்து சென்றவர் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 30 அடி ஆழமுள்ள தண்ணீருக்குள் விழுந்து சடலமாக கிடப்பது தெரிய வந்தது. புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement