தேவாரம் பகுதி சாலைகளில் விபத்து எச்சரிக்கை பலகை அவசியம்
தேவாரம், செப். 19: தேவாரம் பகுதி சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேவாரம், போடி, தேனி, ஆகிய ஊர்களுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலை வழியே தினந்தோறும் அதிகமான அளவில் கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், செல்கின்றன. இச்சாலை வழியே செல்லும் வாகனங்கள் அதிகமாகும்போது, விபத்துக்கள் உண்டாகிறது.
காரணம் சாலையின் இரண்டு பக்கமும் விபத்து உண்டாக்கும் ஆபத்து அதிகம் காணப்படுகிறது. சாலையில் விபத்து எச்சரிக்கை பலகை அவசியம் இருக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆபத்தான இடங்களில், விபத்து எச்சரிக்கை பலகை அதிகம் வைத்திட வேண்டும். இதன்மூலம் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள், வேகத்தை குறைக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே விபத்து எச்சரிக்கை பலகை வைத்து நெடுஞ்சாலைத்துறை சரி செய்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.