கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது
Advertisement
ஆண்டிபட்டி, நவ.18:ஆண்டிபட்டி அருகே கொண்டம்மநாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே ஆண்டிபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஐந்து நபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் முத்துமணி(27), மணியக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த வீரமணி(21), தேனி, பொம்மனம்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராஜேஷ்(34), 17 வயது சிறுவன் மற்றும் ஹரிஷ்(21) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement