பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரியில் இலவச பயிற்சி வகுப்புகள்
தேவதானப்பட்டி, அக். 18: தமிழகத்தின் இளைய தலைமுறை சுயதொழில் சார்ந்த திறனை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு திறன்மேம்பாட்டு நிறுவனம் திறன் தமிழ்நாடு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பெரியகுளம் தோட்டக்கல்லூரியில் இலவச காளான் வளர்ப்பு (26 நாட்கள்), நாற்றங்கால் உற்பத்தி (26நாட்கள்) பயிற்சி வரும் அக்.27ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் காளான் வளர்ப்பில் 25 நபர்களும், நாற்றங்கால் உற்பத்தி பயிற்சியில் 25 நபர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பயிற்சியில் பங்கு பெறுவோரின் வயது வரம்பு 19 முதல் 35 வரை இருக்கவேண்டும். வேலையில்லா பட்டதாரிகள், பள்ளிப்படிப்பில் இடைநின்றவர்கள் மற்றும் சுயதொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் பங்கு பெற தகுதியானவர்கள் ஆவார்கள். ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை சமர்ப்பித்து இப்பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு முதல்வர், தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் செல்-9500390301, 9994703981 என்ற எண்ணிலும் மற்றும் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.