தேவதானப்பட்டி அருகே மூதாட்டியிடம் மூக்குத்தி பறிப்பு
தேவதானப்பட்டி, அக். 18: தேவதானப்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் மணி மனைவி சிட்டம்மாள்(75). இவர் தேவதானப்பட்டி டூ வத்தலக்குண்டு பைபாஸ் சாலை சாத்தாகோவில்பட்டி பிரிவில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று இவரது பெட்டிக்கடைக்கடைக்கு டூவீலரில் வந்த 35 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சிகரெட் வாங்கியுள்ளனர்.
Advertisement
பின்னர் அந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தவாறு முகத்தை பிடித்து வலது மூக்கில் அணிந்திருந்த 2 கிராம் மூக்குத்தியை பறித்துக்கொண்டு பையில் இருந்த ரூ.300 பணத்தையும் திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சிட்டம்மாள் தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement