வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு டார்ச்சர்
போடி, அக். 18: போடி அருகே மீனாட்சிபு ரம் பேரூராட்சியில் உள்ள மண்டையன் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் நிஷாந்தி (24). இவரும் மீனாட்சிபுரம் போடி அருகே துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரமேஷ்ராஜா (33) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் ரமேஷ் ராஜாவும், அவரது தந்தை அரசனும் சேர்ந்து நிஷாந்தியிடம் 10 பவுன் நகை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். இதற்கிடையில் கணவர் ரமேஷ் ராஜாவின் நடவடிக்கை சரியில்லை என மனைவி நிஷாந்தி கண்டித்த போது, வரதட்சணையாக நகை கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து நிஷாந்தி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கணவர் ரமேஷ் ராஜா, மாமனார் அரசன், கணவன் அண்ணன்கள் சுரேஷ் (40), சின்னன் (35), சுகந்தி ஆகியோர் மீது வரதட்சனை கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.