தேனி மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவில் லாப்ரடார் நாய் சேர்ப்பு
தேனி, ஆக. 15: தேனி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு மற்றும் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கு லாப்ரடார் இன நாய் வாங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் தடுப்பு மற்றும் துப்பறியும் பணிகளில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த பிரிவிற்கு கூடுதலாக லாப்ரடார் இன நாய் குட்டி ஒன்று வாங்கப்பட்டுள்ளது. இந்த நாய் குட்டிக்கு ராணா என பெயர் சூட்டி, மோப்பநாய் படை பிரிவில் எஸ்பி சினேகா பிரியா சேர்த்தார். மாவட்ட போலீஸ் படை பிரிவில் ஏற்கனவே போலீஸ் நாய்கள் இருக்கும் நிலையில் தற்போது துப்பறியும் பிரிவுக்கு புதியதாய் லாப்ரடார் நாய்க்குட்டி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.