டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
தேவதானப்பட்டி, ஆக. 15: தேவதானப்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்(51). இவர் கோட்டார்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தேவதானப்பட்டியில் இருந்து டூவீலரில் அழகர்நாயக்கன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனியார் கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.