ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு புதியதாக 5 பேட்டரி வாகனங்கள் வழங்கல்
Advertisement
ஆண்டிபட்டி, அக். 14: ஆண்டிபட்டி பேரூராட்சியில் சுமார் 50,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பேட்டரி வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பேட்டரி வாகனங்களின் தேவை அதிகரித்த நிலையில், மூலதான மானியம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு 5 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பேட்டரி வாகனங்களை நேற்று பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சேர்மன் பொன்.சந்திரகலா கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை சேர்மன் ஜோதி சேகர், கவுன்சிலர்கள் சுரேஷ் பாண்டி, பஞ்சு, பாலசுப்பிரமணி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement