மதுபாட்டில்கள் பறிமுதல்
Advertisement
போடி, அக். 14: போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ விஜயராமன் மற்றும் போலீசார், போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் தலைமையிலான போலீசார் எல்லைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போஜன் பார்க் அருகே கீழதெரு பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி(52) மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தங்கப்பாண்டியை கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.போடி அருகே விசுவாசபுரம் பகுதியில் மேற்கு தெருவை சேர்ந்த சுப்பையா (70) மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Advertisement