ஆண்டிபட்டி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்
ஆண்டிபட்டி, செப். 13: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக தணிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை பொதுமக்கள் மத்தியில் வாசித்துக் காட்டப்பட்டது.
Advertisement
மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 100 நாள் வேலை சம்பந்தமாக உள்ளிட்ட குறைகளை கோரிக்கைகளாக தெரிவித்தனர். இதில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முகமது அபுபக்கர் சித்திக், தணிக்கை ஆய்வாளர் ஆண்டி வேல்சாமி, ஊராட்சி செயலர் பாலமுருகன் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Advertisement