சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
மூணாறு, செப்.13: திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 16 பேர் கொண்ட குழு வேனில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். நேற்று முன்தினம் மூணாறு சுற்றி கண்டுவிட்டு நேற்று காலை மறையூர் செல்ல செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இவர்கள் பயணம் செய்த வாகனம் ஆனைக்கால்பட்டி அருகே காட்டுப்பாட்டை வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.
Advertisement
இதில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சீக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயம் அடைந்தவர்கள் கூடுதல் சிகிச்சைக்காக கோதமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement