வருவாய்த்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
தேனி, ஆக. 13: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேந்திரன், மாவட்ட பொருளாளர் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மை பிரிவு பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும். கருணை அடிப்படை நியமனத்திற்கான உச்சவரம்பினை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சு ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த பணி முதுநிலை நிர்ணயம் செய்வது தொடர்பான அரசாணையை உடன் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.