எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான கிராமிய கலை நிகழ்ச்சிகள்
தேனி, ஆக.13: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான கிராமிய கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் துவக்கி வைத்தார். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எய்ட்ஸ், ரத்ததானம் மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வுக்கான கிராமிய கலைநிழ்ச்சிகளை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தொடங்கி வைத்தார்.
இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களிலும், இரண்டு கிராமிய கலைக்குழுக்களின் மூலமாக 40 விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி மருத்துவ அலுவலர் கவிப்பிரியா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் திருமுருகன், எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் முகமதுபாரூக், நம்பிக்கை மைய மேலாளர் வைரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.