கருநாக்கமுத்தன்பட்டியில் சிறப்பு திட்ட முகாம்
கூடலூர், செப். 12: தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 13க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் சார்பிலும், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் பெறுவதற்கு தனி அரங்கு அமைக்கப்பட்டும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
Advertisement
இந்நிகழ்ச்சியில் கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் மக்கத்தம்மாள், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் துர்கா தேவி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகையா மற்றும் அரங்குகள் அமைத்து இருந்த பல்வேறு அரசு துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி செயலர் ஈஸ்வரன் செய்திருந்தார். ஊராட்சி பகுதிக்குட்பட்ட சுமார் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Advertisement