விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி, அக்.11: தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், ஆண்டிபட்டி தொகுதி செயலாளர் முத்துராமன்,
பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ஆண்டி, பெரியகுளம் நகர செயலாளர் ஜோதி முருகன் முன்னிலை வகித்தனர். தேனி நகரச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார். தேனி திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்த வக்கீல் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில். கோமதி ஆனந்தராஜ், கலா, லட்சுமி விசாகன், அனுமந்தன்பட்டி ஜெயக்குமார், கோம்பை சங்கரமூர்த்தி, குழந்தைராஜ், கதிர் செல்வம், பழனிவேல் ராஜன், சைய்யது மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆபிரகாம் நன்றி கூறினார்.