ரகளையில் ஈடுபட்டவர் கைது
Advertisement
சின்னமனூர், அக். 10: சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சி பகுதியில் ஒருவர் குடித்து விட்டு ஆபாசமான முறையில், அருவருக் கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை யில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து தகவலின் பேரில் ஓடைப்பட்டி எஸ்ஐ ரவி சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டவரை எச்சரித்து அனுப்பினார். ஆனால், அவர் மீண்டும் ஆபாசமாக பேசி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார். இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் தேனி ஒன்றியத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டி தென்றல் நகரைச் சேர்ந்த குப்புசாமி (எ)ராஜாங்கம் (26) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement