சுருளி வேலப்பர் கோயிலில் வருடாபிஷேக விழா
கம்பம், செப். 10: கம்பத்தில் பிரசித்தி பெற்ற சுருளி வேலப்பர் (எ) சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ நவகிரகம் மற்றும் பரிவார சாமிகள் உள்ளன.
Advertisement
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்தாண்டு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முதலாமாண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
Advertisement