தோட்ட காவலாளி மர்ம சாவு?
கூடலூர், செப். 9: கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டி அரசமர தெருவை சேர்ந்தவர் கர்ணன்(70). அதே ஊரில் தனியார் தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கர்ணன் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த கிடப்பதாக அவரது மகள் மகேஸ்வரிக்கு நேற்று அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.
Advertisement
கூடலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கர்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement