தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அனைத்து ஊராட்சிகளிலும் கொசு மருந்து அடிக்க கோரிக்கை

வருசநாடு, ஆக. 8: கடமலை-மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வருசநாடு பொன்னன்படுகை, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, மந்திசுனைமூலக்கடை, முத்தாலம்பாறை, சிங்கராஜபுரம் உள்ளிட்ட 18 ஊராட்சிகளிலும் சில நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதிமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதை ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே ஒவ்வொரு கிராமங்கள்தோறும் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் முறையாக கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து புதிய மேகமலை கல்வி அறக்கட்டளை செயலாளர் ஆசிரியர் வேல்முருகன் கூறுகையில், ‘‘இப்பகுதிகளில் ஏற்கனவே கொசுத்தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடித்து கொசுக்களின் இனப்பெருக்கத்தை தற்காலிகமாகக் குறைந்தது. ஆனால் தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக கொசு மருந்து அடித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். கொசுக்களை ஒழிப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

 

Related News