வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு
கோபால்பட்டி, நவ. 7: சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தி.பள்ளபட்டியை சேர்ந்தவர் பரமசிவம். கூலித்தொழிலாளி. நேற்று இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதை கண்ட பரமசிவம் உடனே இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
Advertisement
இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
Advertisement