நாய்கள் கடித்து ஆடுகள் பலி
வடமதுரை, நவ. 7: வேடசந்தூரில் தெரு நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் இறந்தன. வேடசந்தூர் போக்குவரத்து பணிமனை எதிரில் தமிழ்வாணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அவர் பண்ணை வைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.
Advertisement
இந்நிலையில் நேற்று முன்தினம் இஅவரது தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. 6 ஆடுகள் படுகாயமடைந்தன. தகவலறிந்ததும் அரசு கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Advertisement