அனுமந்தன்பட்டியில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
உத்தமபாளையம், ஆக.7: அனுமந்தன்பட்டியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. அனுமந்தன்பட்டி பேரூர் இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு பேரூர் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் செஞ்சுரி செல்வம், தேனி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமாரன், அப்தாகிர் கம்பம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேசிங்குராஜா முன்னிலை வகித்தனர்.
இளைஞர் அணி சார்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இதில் கம்பம் ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் ராஜ்குமார், முன்னாள் பேரூர் செயலாளர் கோவிந்தராஜ், மூத்த உறுப்பினர் கருணாநிதி, கம்பம் தலைமைக் கழக பேச்சாளர் தங்கை, அனுமந்தன்பட்டி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சத்யராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாட்டினை அனுமந்தன்பட்டி பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.