கம்பம் பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
கம்பம், ஆக.7: கம்பத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆய்வு செய்தார். கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 90 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனை கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நேரில் ஆய்வு செய்தார்.
கம்பம் நகராட்சிப் பகுதிகளில் 15வது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் 31வது வார்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியையும், கம்பம் நகராட்சி உழவர் சந்தை பகுதியில் நடைபெற்று வரும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.178 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் உமா சங்கர், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் சாதிக், ரோஜாரமணி, வார்டு பொதுமக்கள் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.