தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தேவாரம், நவ. 6: தேனி அன்னஞ்சியை சேர்ந்தவர் சரவணன் (50), கூலி தொழிலாளி. இவர் மனைவி துளசி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 3ம் தேதி மனைவி துளசியிடம் தனது சொந்த ஊரான கோம்பைக்கு சென்று தனது அம்மாவை பார்த்து வருவதாக கூறிவிட்டு சரவணன் சென்றுள்ளார்.
Advertisement
இந்நிலையில் கோம்பையில் உள்ள அம்மா வீட்டில் சரவணன் தூக்கிட்டு தொங்கியபடி கிடந்துள்ளார். இதுகுறித்து துளசி கோம்பை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
Advertisement