விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
கூடலூர், நவ. 6: தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பாக, கூடலூர் பகுதிகளில் வளரிளம் பெண்கள் குறித்த சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கம்பம் வட்டார ஆரம்ப சுகாதார துறை சார்பாக, வட்டார அளவில் கடந்த நவ.1ம் தேதி முதல் 33 நாட்கள் 100 இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
Advertisement
தாய் காவியா கலைக்குழு மூலம் நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கூடலூரில் மந்தையம்மன் கோவில் சந்தை, தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கலைக்குழு மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பெண்கள் அனைவரும் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.
Advertisement