உத்தமபாளையத்தில் எஸ்.ஐ.ஆர் பணி துவக்கம்
உத்தமபாளையம், நவ. 5: உத்தமபாளையம் வருவாய் கோட்டத்தில் கம்பம், போடி, சட்டமன்ற தொகுதிகளும் ஆண்டிபட்டி (பகுதி), சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில் ஒன்றிய அரசின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நேற்று முதல் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக தேர்தல் களப்பணியாதவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை வைத்து ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர். சம்பந்தப்பட்ட முகவரியில் வாக்காளர்கள் குடியிருக்கிறார்களா அல்லது வேறு தொகுதியில் இடமாறுதல் பெற்று விட்டார்களா என்பன உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
இதே போல் வாக்காளர் பட்டியலில் அடங்கியுள்ள மொத்த வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் வாக்களர் பாகவாரியாக தேர்தல் களப்பணியாளர்கள் விபரங்களை சேகரம் செய்து வருகின்றனர். அதற்கான பணிகள் நேற்று முதல் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தீவிர தேர்தல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ செய்யதுமுகமது நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.
தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன நேற்று இதற்கான அனைத்து கட்சி கூட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட திமுக கூட்டணி கட்சிகளான திமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.