சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
ஒட்டன்சத்திரம், நவ. 1: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (70). எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று இரவு டூவீலரில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். ராமபட்டினம் சாலையில் வந்த போது கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வாகனம் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement