அக்.5, 6 தேதிகளில் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்
தேனி: வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆக.12ல் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 36,105 குடும்ப அட்டைதாரர்கள் பயனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த மாதத்திற்குரிய ரேஷன் பொருட்கள் வருகிற 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் வாகனம் மூலம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்குச் சென்று வழங்கப்படவுள்ளது என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Advertisement