மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
திண்டுக்கல், செப்.30:திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் பஞ்சப்பட்டி அணி முதலிடம் பிடித்தது.திண்டுக்கல்லில் ஒன்றிய அரசின் மேரா யுவ பாரத் மற்றும் இளைய பாரதம் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி சூசைப்பட்டியில் நடைபெற்றது. இதில் 8 அணிகள் கலந்து கொண்டன. அதில் பஞ்சம்பட்டி அணி முதலிடமும், சூசைப்பட்டி அணி இரண்டாம் இடம் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, தேசிய இளைஞர் விருதாளர் மாரிமுத்து, பிரேம்குமார், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Advertisement
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை காஜா மைதீன், வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம், சான்றிதழ்களை வழங்கினார். இப்போட்டியை காண ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Advertisement