ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு
Advertisement
ஆண்டிபட்டி, அக்.29: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஊராட்சிகள் உதவி இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் பணிகள் நடைபெறும் விதம், பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஊராட்சியில் நடைபெற்று வரும் சுகாதார பணிகள், அடிப்படை வசதிகளான தெரு விளக்கு, சாலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் ஊராட்சி செயலர் பிச்சை மணி மற்றும் ஊராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்நு கொண்டனர்.
Advertisement