கம்பத்தில் வெள்ளச் சேதங்களை தவிர்க்க சேனை ஓடை முறையாக தூர்வாரப்படுமா?
கம்பம், அக். 25: கம்பத்தில் வெள்ளச் சேதங்களை தவிர்க்க சேனை ஓடையை முறையாக தூர் வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18ம் தேதி பெய்த மழையால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக கம்பம்மெட்டு அடிவாரப் பகுதியில் உருவாகக்கூடிய காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் தாத்தப்பன்குளம், அம்பேத்கர் காலனி மற்றும் வாவேர் பள்ளிவாசல் தெருக்களில் குடியிருப்புகளில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த வெள்ளம் காரணமாக சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வீட்டில் உள்ள பொருட்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் உணவுக்கு கூட சிரமப்பட்டனர்.
Advertisement
Advertisement