கொட்டை முந்திரி சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
Advertisement
தேவாரம், செப்.24: கோம்பை மலையடிவார நிலங்களில் கொட்டை முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கோம்பை, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, போடி உள்ளிட்ட மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் கொட்டை முந்திரி சாகுபடி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் மலையடிவாரங்களில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் இந்த சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் கொட்டை முந்திரி சேகரம் செய்யப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. கொட்டை முந்திரி காடுகளில்தான் அதிகம் பயிரிடப்படுகிறது. மழை கிடைத்தால் போதும் என்ற நிலையில் கொட்டை முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Advertisement