தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க கோரிக்கை
தேவாரம், செப்.24:உத்தமபாளையம் வட்டாரத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பில் தென்னை விவசாயங்கள் நடந்தன. இதில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வரை தென்னை விவசாயம் பண்ணைப்புரம் பகுதியில் நடந்தது. இடைக்காலங்களில் குறிப்பாக கடந்த 15 வருடம் முன்பு மழை இல்லாத நிலையில் இதன் விவசாயம் சுருங்கியது.
இதற்கு அனைத்து கண்மாய்கள், குளங்களிலும் மழை இல்லாத நிலையில் வறண்டதுதான் காரணம். தென்னை விவசாயத்தை பொறுத்தவரை மழை மிகவும் அவசியம். வடகிழக்கு பருவமழை, கோடைமழை, தென்மேற்கு பருவமழை, சரியான காலங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை இல்லாதபோது, தென்னை, நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றத்துடனே உள்ளனர். மேலும் பருவமழை தொடர்ந்து பெய்யும்போது தென்னை விவசாயம் பரவலாக இருக்கும் என்பதால் இதனை ஊக்குவிக்க வேளாண்மைதுறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.