டெங்கு காய்ச்சலை விரட்ட அட்வைஸ்
Advertisement
தேவதானப்பட்டி, செப். 22: தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தற்போது அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது: டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல்கள் குணப்படுத்தக்கூடியவைதான். நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு உருவாகும். குடிநீரை காய்ச்சி, ஆற வைத்து குடிக்க வேண்டும். கண்ட இடங்களில் நீர் தேங்க விடக்கூடாது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அதன் முட்டை பருவத்திலேயே அழித்து விட வேண்டும். அதனை வளர விட்டால், அதனால் பாதிப்பு நிச்சயம் அதிகரிக்கும். இவ்வாறு கூறினர்.
Advertisement