3 மையங்களில் சிறப்பு முகாம்
தேனி, ஆக. 19: தேனி மாவட்டத்தில் பெரியகுளம், பழனிசெட்டிபட்டி ,கூடலூர் ஆகிய பகுதிகளில் இன்று(ஆக.19ம் தேதி) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சியில் உள்ள 14, 15, 16 மற்றும் 17 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரியகுளம் நகர் தென்கரையில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் திருமண மண்டபத்தில், நகராட்சி மேலாளர் தியாகராஜன் கண்காணிப்பிலும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 1 முதல் 7 வரையிலான வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பழனிசெட்டிப்பட்டியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவில் மண்டபத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் கண்காணிப்பிலும், கூடலூர் நகராட்சியில் உள்ள 4, 5, 6 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கூடலூர் நடுத்தெருவில் உள்ள வீரசிக்கம்மாள் மண்டபத்தில் நகராட்சி மேலாளர் வெங்கடேசன் கண்காணிப்பிலும் இன்று (ஆக. 19ம் தேதி) நடக்க உள்ளது.