போடியில் சிறப்பு முகாம்
போடி, செப். 14: போடி வாரச்சந்தை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கமிஷனர் பார்கவி தலைமையில் நடந்தது. இந்த முகாமிற்கு நகராட்சி பொறியாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் 3 வார்டுகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து சுமார் 820 மனுக்கள் பெறப்பட்டது.
போடி தாசில்தார் சந்திரசேகர் உடனடி தீர்வு ஏற்படுத்தும் மனுக்களை விரைவாக நடவடிக்கை எடுத்து ஆய்வு மேற்கொண்டார். அதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பட்டா மாறுதல், புதிய வீடுகள் கட்டுவதற்கான அனுமதி உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்பட்டு பயனாளிகளுக்கு நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரியும், கமிஷனர் பார்கவியும் வழங்கினர். மேலும் இந்த முகாமில் போடி நகர செயலாளர் புருஷோத்தமன், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், திமுகவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.